புத்தாண்டை முன்னிட்டு பெங்களூருவில் கட்டுப்பாடுகள் - காவல்துறை தகவல்

புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க பெங்களூரு மக்கள் தயாராகி வருகின்றனர்.

Update: 2023-12-26 13:18 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் 2024-ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க பெங்களூரு மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"புத்தாண்டு தினத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நகரின் முக்கிய சாலைகளான எம்.ஜி. ரோடு, பிரிகேட் ரோடு, ரெசிடென்சி ரோடு உள்ளிட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும்.

டிசம்பர் 31-ந்தேதி இரவு 11 மணிக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படும். இரவு நேரத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள் அணில் கும்ப்லே ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் டிரினிட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் பொறுப்புணர்வோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்