மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவது பாராளுமன்றத்தின் பொறுப்பு - ஓம் பிர்லா

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவது பாராளுமன்றத்தின் பொறுப்பு என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-25 15:50 GMT

புதுடெல்லி,

கனடாவில் உள்ள ஹாலிஃபாக்சில் காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டுள்ளார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது - "மக்கள் தங்கள் சமூக-பொருளாதார நிலையில் மாற்றத்திற்கான ஒரு ஊடகமாக பாராளுமன்றத்தை பார்க்கிறார்கள். எனவே, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப செயல்படுவது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.

சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் இந்தியாவில் உள்ள மக்கள் ஜனநாயக அமைப்புகளின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளனர். தேர்தலில் அதிகரித்து வரும் வாக்குப்பதிவு, மக்கள் ஜனநாயகத்தை சிறந்த ஆட்சி வடிவமாக கருதுகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது.

வளர்ச்சியின் பலன்கள் வரிசையில் இருக்கும் கடைசி நபருக்கும் சென்றடையும் வகையில், வளமான மற்றும் அறிவு நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்