இடஒதுக்கீட்டை வழங்க கோரி பிலுவா சமுதாயத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

இடஒதுக்கீட்டை வழங்க கோரி பிலுவா சமுதாயத்தினர் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த பிலுவா சமுதாயத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள் கூறுகையில், கடந்த 1994-ம் ஆண்டுக்கு முன்பு 2ஏ பிரிவில் எங்களுடைய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தற்போது அந்த 2ஏ பிாிவு இட ஒதுக்கீட்டை அரசு நீக்கி உள்ளது. இதனால் மாநில அரசு மீண்டும் கடந்த 1994-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த இடஒதுக்கீட்டை பிலுவா சமுதாயத்தினற்கான வழங்கவேண்டும்.

அரசின் அனைத்து விதமான சலுகைகளும் எங்களுடைய சமுதாயத்தினருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டா் ரமேசிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்