ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான அருங்காட்சியகத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' மியூசியம் அமைந்துள்ளது.

Update: 2024-01-16 23:33 GMT

புதுச்சேரி,

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது.

தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்- இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற அருங்காட்சியகத்தை தைத்திருநாளை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளனர்.

உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரின் மெழுகு சிலை சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலா பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது' என்று பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்