வரும் 22-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு

இந்த பேரணியில் அனைத்து மதத்தினரும் கலந்துகொள்வார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-16 16:45 GMT

கொல்கத்தா, 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள வரும் 22-ம் தேதி அன்று மேற்கு வங்கம் முழுவதும் மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ,

மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், பண்டிகை என்பது அனைவருக்குமானது. வரும் 22-ம் தேதி பேரணி நடைபெறும். மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளி கோயிலில்பூஜை செய்த பிறகு, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அங்கிருந்து பேரணி தொடங்கும்.இந்தப் பேரணி அனைத்து மதங்களையும் இணைப்பதாக இருக்கும். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், மசூதிகள் ஆகியவற்றுக்குச் செல்வார்கள். இந்த பேரணி தெற்கு கொல்கத்தாவின் சர்க்கஸ் மைதானத்தில் நிறைவு பெறும். அதனை அடுத்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். 

அனைத்து மதங்களும் சமமானவையே. எனவே, இந்த பேரணியில் அனைத்து மதத்தினரும்  கலந்துகொள்வார்கள்.பண்டிகைகள்தான் மக்களை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொருவரோடும் நாம் பேசக்கூடிய தருணம் அது.   என தெரிவித்துள்ளார்.

,

Tags:    

மேலும் செய்திகள்