நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் வெளியீடு..!

நவராத்திரியை முன்னிட்டு குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதிய ‘கார்போ’ பாடல் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-14 18:38 GMT

புதுடெல்லி,

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடிய 'கார்போ' என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை 'கார்போ' பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்