2023ல் 11 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி!
பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியப்பிரதமர் ஒருவர் சென்றது இதுவே முதல் முறை.;
புதுடெல்லி,
2023-ல் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், கிரீஸ், தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றார்.
பிரதமர் மோடியின் 2023-ம் ஆண்டு வெளிநாட்டு பயணங்கள் குறித்த பார்வை.
# மே 19- 21: ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற்ற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
# மே 21-22 : பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கு தலைமை வகித்தார். பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் சென்றது இதுவே முதல் முறை.
# மே 22-24 : ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீசின் அழைப்பை ஏற்று அந்நாட்டின் சிட்னி நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
# ஜூன் 20-23: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருடன் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்றார்.
# ஜூன் 24-25: எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
# ஜூலை 15-13: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பாஸ்டல் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்றார். பிரான்சின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
# ஜூலை 15: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறை பயணம். அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு நிகழ்வாக பிரதமர் மோடியை வரவேற்றார்.
#ஆகஸ்ட் 22-24: தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் உள்ள சம்மர் பிளேசில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
# ஆகஸ்ட் 25: கிரீஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம். அந்நாட்டின் 2-வது உயரிய சிவிலியன் விருது, 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை அந்நாட்டு அதிபர் கத்தரீனா சாகெல்லரோபௌலோ வழங்கினார்.
# செப். 5 முதல் 7: ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம்.
# நவம்பர் 30 முதல் டிசம்பர் 2: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும் அபுதாபி ஆட்சியாளருமான எச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் உலக பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாய் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார்.