'நாட்டில் ரேஷன் அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது' - மத்திய அரசு தகவல்

99 சதவீத ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-16 09:08 IST
நாட்டில் ரேஷன் அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

நாட்டில் எத்தனை சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் டிஜிட்டல் மயமாக்கம் பணி எந்த அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்தும் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, நாட்டில் 19 கோடியே 72 லட்சம் ரேஷன் அட்டைகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 99 சதவீத ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்