மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது புகார் கூறிய 2 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்படவில்லை

மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது புகார் கூறிய 2 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-01-04 20:49 GMT

பெங்களூரு:

மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது புகார் கூறிய 2 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மடாதிபதி கைது

சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த நிலையில் மடத்திற்கு சொந்தமான பள்ளியின் விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகள் சிவமூர்த்தி முருகா சரணரு மீது தங்களை பலாத்காரம் செய்து விட்டதாக புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சித்ரதுர்கா போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, விடுதியின் வார்டன் ரஷ்மி உள்பட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மருத்துவ பரிசோதனை அறிக்கை

மேலும் கைதான மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சார்பில் சித்ரதுர்கா கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலங்களை பெற்று கொண்டனர். மேலும் 2 மாணவிகளையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் 2 மாணவிகளின் மருத்துவ அறிக்கையை போலீசார் சித்ரதுர்கா கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அந்த அறிக்கையில் 2 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மடாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்