அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: குழந்தைக்கு "ராம் ரஹீம்" என பெயர் சூட்டிய முஸ்லீம் பெண்
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் குழந்தைக்கு இப்பெயரை தேர்தெடுத்தாக குழந்தையின் பாட்டி ஹுஸ்னா பானு கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அயோத்தி மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனையில் பர்சானா என்ற கர்ப்பிணிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டதுள்ளது. இவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தைக்கு "ராம் ரஹீம்" என்று பெயரிட்டு இருப்பதாகவும், குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர் நவீன் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் குழந்தைக்கு "ராம் ரஹீம்" என்று பெயர் வைத்ததாக குழந்தையின் பாட்டி ஹுஸ்னா பானு கூறியுள்ளார்.