இந்துக்களை மதம் மாற்றுவோரை கண்டித்து பேரணி; ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தகவல்

என்.ஆர்.புராவில் இந்துக்களை மதம் மாற்றுவோரை கண்டித்து பேரணி நடத்தபோவதாக ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.

Update: 2022-09-19 19:00 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவுக்கு நேற்றுமுன்தினம் ஸ்ரீராம சேனையின் தேசிய தலைவர் பிரமோத் முத்தாலிக் வந்திருந்தார். அப்போது அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் அதிகப்படியாக மதம் மாற்றும் செயல் நடந்து வருகிறது. இதை இந்து அமைப்பினர் தட்டி கேட்டால் அதற்கு அதிகப்படியான எதிர்ப்பு கிளம்புகிறது. இந்து கோவில்களுக்கு செல்வோரின் மனதை மாற்றி அவர்களை தேவாலயங்களுக்கு அழைத்து சென்று போதனை செய்தனர்.

அந்த வகையில் என்.ஆர்.புராவில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உருவாகி உள்ளன. இதை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) ஸ்ரீராமசேனை அமைப்பின் தொண்டர்கள் தலைமையில் தாலுகா முழுவதும் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடத்த உள்ளோம். அதேபோன்று மாநில அரசு இந்து அமைப்பினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்