குடும்ப தகராறு காரணமாக 4 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்

ராஜஸ்தானில் குடும்ப தகராறு காரணமாக 4 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-05 20:47 GMT

கோப்புப்படம்

பார்மர்,

ராஜஸ்தானில் குடும்ப தகராறு காரணமாக 4 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள மண்டலி பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா (வயது 27) என்ற பெண் தனது நான்கு குழந்தைகளைக் ஒரு தானிய டிரம்மில் வைத்து அதனை மூடி அவர்களை கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த குழந்தைகள் பாவனா (வயது 8), விக்ரம் (வயது 5), விம்லா (வயது 3), மனிஷா (வயது 2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவரது கணவர் ஜெதாராம் வேலைக்காக ஜோத்பூருக்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்