மின்னல் தாக்கி விவசாயி பலி; மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி விவசாயி பலியானார். அவரது மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆட்களும் செத்தன.;

Update:2023-04-06 02:30 IST

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி விவசாயி பலியானார். அவரது மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆட்களும் செத்தன.

பலத்த மழை

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதியம் சுமார் 3 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் பாகேபள்ளி தாலுகா மிட்டேமரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோடேனஷள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வெங்கடப்பா(வயது 42) மற்றும் அவரது மனைவி லட்சுமம்மா ஆகியோர் தங்களது வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

மழை பெய்ததால் அவர்கள் விளைநிலம் அருகே உள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாகேபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வெங்கடப்பாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லட்சுமம்மாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

15 ஆடுகள் செத்தன

இதேபோல் சிட்லகட்டா தாலுகா கொங்கேனஹள்ளி கிராமத்தில் மின்னல் தாக்கி வயலில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் பரிதாபமாக செத்தன. இந்த ஆடுகள் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமானது ஆகும். ஆடுகளை பறிகொடுத்த விவசாயி வெங்கடேஷ் தனக்கு அரசு சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்