உலகத்தர வடிவமைப்பில் டெல்லி ரெயில் நிலையம்: விரைவில் புனரமைப்பு
உலகத்தர வடிவமைப்பில் டெல்லி ரெயில் நிலையம் விரைவில் புனரமைக்கப்பட உள்ளது.
புதுடெல்லி,
ரெயில் பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக புனரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் டெல்லி ரெயில் நிலையமும் புனரமைக்கப்பட இருக்கிறது. டெல்லி ரெயில் நிலையம் மிகவும் பரபரப்பான ரெயில் நிலையம் ஆகும். இங்கு 16 பிளாட்பாரங்கள் உள்ளன. தினமும் சுமார் 240 ரெயில்கள் வந்து செல்கின்றன.
இந்த ரெயில் நிலையத்தை புனரமைப்பதற்காக முன்மொழியப்பட்ட வடிவமைப்பு மாதிரியை ரெயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் நவீனமாக காட்சி அளிக்கும் இந்த வடிவமைப்பு, வளர்ந்த நாடுகளில் உள்ள கட்டமைப்பை நினைவுப்படுத்துகிறது. மாதிரிப்படம் வெளியிடப்பட்டாலும், புனரமைப்பில் செய்யப்படும் வசதிகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. புனரமைப்பு பணிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.