செல்போன் வைத்திருக்க ரெயில் லோகோ பைலட்டுகளுக்கு தடை.!
ரெயில் இயக்குபவர்களின் கவனம், இயக்கும் திறன் போன்றவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பணியில் உள்ளபோது பணியாளர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செல்போன் ஆப் செய்யப்பட்டிருப்பது போன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் என்றும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆப் செய்யப்பட்டிருக்கும் செல்போனை அருகில் வைத்திருப்பதும் தடை செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.
ரெயில் இயக்குபவர்களின் கவனம், இயக்கும் திறன் போன்றவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.