நள்ளிரவு டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணித்த ராகுல்காந்தி...!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று நள்ளிரவு லாரியில் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை பயணம் மேற்கொண்டார்.

Update: 2023-05-23 07:22 GMT

டெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கர்நாடக தேர்தலின் போதும் ராகுல்காந்தி பைக்கில் சென்று டெலிவரி பாய்களுடன் உரையாடினார். பஸ்சில் பயணித்து பயணிகளுடன் உரையாடினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் சென்றார். அவர் லாரி டிரைவருடன் உரையாடியபடி பயணம் மேற்கொண்டார்.

லாரியில் ராகுல்காந்தி பயணம் செய்யும் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ், லாரி டிரைவர்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள அவர் பயணம் மேற்கொண்டார். இந்திய சாலைகளில் 90 லட்சம் லாரி டிரைவர்கள் உள்ளனர். அவர்களுக்கென்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ராகுல்காந்தி லாரி டிரைவரின் மனதின் குரலை கேட்கிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்