லண்டனில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராகுல் காந்தி!

யாரும் எதிர்பாராத வண்ணம் சோனியா காந்திக்கு போன் மூலம் அழைத்து, உறுப்பினர்களிடம் பேச வைத்தார்.

Update: 2022-05-22 12:23 GMT

புதுடெல்லி,

லண்டனில் நடைபெற்ற 'இந்தியாவுக்கான திட்டங்கள்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவான இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்(ஐ ஓ சி) உறுப்பினர்களை லண்டனில் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் கலந்துரையாடிய அவர், யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திக்கு போன் மூலம் அழைத்து, உறுப்பினர்களிடம் பேச வைத்தார். இந்த சம்பவத்தால் உறுப்பினர்கள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் திகைத்தனர்.

அவர்களிடம் பேசிய சோனியா காந்தி கூறியதாவது:- எதிர்கட்சிகளின் வெற்றிக்கு வெளிநாடுகளில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தெலுங்கானாவின் ஐஓசி குழு உறுப்பினர்கள் 2014ல் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதற்கு சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்தனர். 2023 தெலுங்கானா தேர்தலில் கட்சி வெற்றிபெற கடுமையாக உழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:- "நாம் எந்த ஒரு அரசியல் அமைப்புக்கும் எதிராகப் போராடவில்லை, தீங்கு விளைவிக்கும் சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடுகிறோம்.நாட்டின் நிறுவனங்களைப் பாதுகாக்க இந்த போராட்டம் நடைபெறுகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்