புதிய பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா உத்தரவு வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் ராகுல் காந்தி மனு

புதிய பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா உத்தரவு வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Update: 2023-05-23 17:04 GMT

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என மக்களவை செயலகம் அறிவித்தது. கடந்த மார்ச் முதல் எம்.பி. பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தூதரக அந்தஸ்திலான பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்து உள்ளார்.

இந்த நிலையில், ஒரு பொதுமுறையான புதிய பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு விண்ணப்பிக்க முடிவு செய்து, அதற்கான அனுமதி கோரி, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் தடையில்லா உத்தரவை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா முன் நாளை விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்