தெலுங்கானாவில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை...!

தெலுங்கானாவில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

Update: 2022-10-29 03:58 GMT

ஐதராபாத்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி மக்களைச் சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி அவர் இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் யாத்திரை நடத்திவிட்டு அவர் கர்நாடக மாநிலத்தின் இருந்து தெலுங்கானாவில் நுழைந்தார். மேலும், தீபாவளி பண்டிகையொட்டி பாரத் ஜோடோ பாதயாத்திரை 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பின், நேற்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.

இந்த நிலையில், ராகுல்காந்தி இன்று காலை 6 மணிக்கு மகபூப்நகரில் உள்ள தர்மபூரில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். இன்று 20 கிமீ தூரம் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். அதன்பின், ஜாட்செர்லா பகுதியில் மாலை நடைபெற உள்ள கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம், தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள், 7 நாடாளுமன்ற தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி மராட்டியத்தில் நுழைய உள்ளது. முன்னதாக நவம்பர் 4-ந்தேதி யாத்திரைக்கு ஓய்வு விடப்படுகிறது.

தெலுங்கானாவில் இந்த பாதயாத்திரையின் போது பல்சமய வழிபாட்டுத்தலங்களுக்கு ராகுல் காந்தி சென்று வழிபாடு செய்கிறார். அத்துடன் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் அவர் சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உளளன.

Tags:    

மேலும் செய்திகள்