காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராகுல்காந்தி - 'இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது' என டுவிட்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார்.

Update: 2023-01-29 12:42 GMT

ஸ்ரீநகர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

145 நாட்கள் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை நிறைவடைகிறது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்துடன் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவடைகிறது.

இந்நிலையில், நாளை கூட்டம் நடைபெற்ற உள்ள நிலையில் இன்று பாத யாத்திரையின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும், அன்பு எப்போதும் வெற்றிபெறும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்