கோவா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றி கோவா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-08-03 22:25 GMT

Image Courtacy: PTI

பனாஜி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று முன்தினம் இரவு கோவா சென்றார். கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து நேராக தலைநகர் பனாஜி அருகே தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு கோவா மாநில காங்கிரஸ்எம்.எல்.ஏ.க்கள் 3 பேருடனும் இரவு உணவு சாப்பிட்டார்.

கோவா மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் கோவா மாநில அரசியல் நிலவரம், கட்சியை பலப்படுத்துவது ஆகியவை குறித்து ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும் அவர்களுடன் விவாதித்தார்.

இதுகுறித்து அமித் பட்கர் கூறுகையில், ''தனிப்பட்ட பயணமாக வந்த போதிலும், நாடாளுமன்ற தேர்தல், கட்சியை பலப்படுத்துதல் மற்றும் இதர அரசியல் விவகாரங்கள் குறித்து ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்'' என்றார். பின்னர், நேற்று காலை ராகுல்காந்தி ெடல்லி புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்