ராகுல் காந்தி சட்ட ரீதியாகவும் தோல்வி அடைந்துவிட்டார்

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி சட்ட ரீதியாகவும் தோல்வி அடைந்துவிட்டதாக பா.ஜனதா விமா்சித்துள்ளது.

Update: 2023-03-23 18:45 GMT

பெங்களூரு:-

சிறை தண்டனை

குஜராத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பெயரை ஒப்பிட்டு அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு அங்குள்ள கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுதான்சு திரிவேதி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இன்று அரசியலில் உள்ள தலைவர்களையோ அல்லது ஒரு சமுதாயம் குறித்தோ அரசியல் ரீதியாக விமர்சிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ராகுல் காந்தியின் தரத்திற்கு அவர் பிரதமரை தவறாக விமர்சித்து பேசியது சரியானது அல்ல. ராகுல் காந்தி ஏற்கனவே அரசியல் ரீதியாக தோல்வி அடைந்துவிட்டார்.

அரசியல் சாசனம்

அவர் பேசும்பேது எச்சரிக்கையாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். நமது அரசியல் சாசனம், கலாசாரத்தை அவர் மதிக்க வேண்டும். ஆனால் அவர் அரசியல் ரீதியாக மட்டுமின்றி தார்மீக மற்றும் சட்ட ரீதியாகவும் தோல்வி அடைந்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பாதயாத்திரையின் வெற்றியை பா.ஜனதாவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று காங்கிரசார் சொல்கிறார்கள்.

அந்த பாதயாத்திரையின் தாக்கம், குஜராத் மற்றும் மூன்று வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் முற்றிலுமாக தோல்வி அடைந்தது. அது பாரத் ஒற்றுமையைவிட பாரத் பிரிவினை யாத்திரை ஆகும்.

இவ்வாறு சுதான்சு திரிவேதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்