ராகுல் காந்தி அமெரிக்காவில் முட்டாள்தனமான கருத்துகளை பேசி தேச துரோகம் செய்துள்ளார் - பா.ஜ.க. கடும் விமர்சனம்

ராகுல் காந்தி அமெரிக்காவில் தேச துரோகம் செய்துள்ளார் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.

Update: 2024-09-12 11:32 GMT

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஆன பிறகு அவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில், அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகளுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் ராகுல் காந்தி முட்டாள்தனமான கருத்துகளை பேசி தேச துரோகம் செய்துள்ளார் என பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ராகுல் காந்தி அமெரிக்காவில் 'தேச துரோகம்' செய்துள்ளார். அவர் அமெரிக்காவில் இந்தியாவைக் குறித்து முன்வைத்துள்ள பிம்பத்தால் ஒட்டுமொத்த நாடும் புண்பட்டுள்ளது.

சாதிக்கு எதிராக சாதியை முன்னிறுத்தி, மதத்திற்கு எதிராக மதத்தை முன்னிறுத்தி, வெளிநாட்டில் சீக்கியர்களைப் பற்றி மோசமான கருத்துகள் கூறப்பட்டால், அது 'தேச துரோகம்' என்றே அழைக்கப்படும்.

வெளிநாட்டில் இந்தியாவை சரியான கண்ணோட்டத்தில் முன்னிறுத்த தெரியாதவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காந்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்