"அதானி நிறுவனத்தில் ரூ.20,000 கோடி யாருடையது?" - கேள்வி கேட்டு ஆவேசமாக கிளம்பிய ராகுல் காந்தி

அதானியின் செல் நிறுவனத்தில் ரூபாய் 20,000 கோடி யாருக்கு உள்ளது என்றும், இதற்கான பினாமி யார் என்றும் கேள்வி எழுப்பிவிட்டு அங்கிருந்து ராகுல் காந்தி ஆவேசமாக புறப்பட்டு சென்றார்.

Update: 2023-04-04 15:00 GMT

புதுடெல்லி,

அதானியின் செல்டு நிறுவனத்தில் ரூபாய் 20,000 கோடிக்கு பினாமி யார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி மே 10ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையடுத்து தேர்தலை சந்திக்க பாஜக காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் நீதித்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பதாக பாஜக குற்றச்சாட்டி வருவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு," அதானியின் செல்டு நிறுவனத்தில் ரூபாய் 20,000 கோடி யாருக்கு உள்ளது என்றும், இதற்கான பினாமி யார் என்றும் கேள்வி எழுப்பிவிட்டு அங்கிருந்து ராகுல் காந்தி ஆவேசமாக புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்