கடையில் திருடியதால் ஆத்திரம்: சிறுவனை அடித்துக்கொன்ற வியாபாரி

தீபக் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2024-04-21 07:52 IST

புதுடெல்லி,

டெல்லி புறநகர் பகுதியில் உள்ள சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் தீபக் (வயது 26), பேட்டரி வியாபாரி. இவரது கடையில் அடிக்கடி பேட்டரிகள் திருட்டு போனது. இது தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தீபக்கும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து சிறுவனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து நைசாக தப்பிவிட்டனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, வியாபாரி தீபக் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை கைது செய்துள்ளனர். 3 வாரங்களுக்கு பிறகு இந்த கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்