பாடலை போடு... பப்பில் கூச்சல்: 3 இளம்பெண்களுக்கு அடி, உதை; ஆடைகள் கிழிப்பு

உத்தர பிரதேசத்தில் பப்பில் காசு கொடுத்து பாடலை போட கூறிய விவகாரத்தில் 3 இளம்பெண்களை பவுன்சர்கள் அடித்து, உதைத்து ஆடைகளை கிழித்து உள்ளனர் என வழக்கு பதிவானது.

Update: 2023-07-16 13:52 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் இந்திராபுரம் பகுதியில் டி மால் என்ற இடத்தில் உணவு மற்றும் தங்கும் வசதி கொண்ட பப் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பப்புக்கு பெண்கள் சிலர் நள்ளிரவில் சென்று உள்ளனர். விடிய, விடிய பாட்டு, நடனம் என பொழுதுபோக்கிய நிலையில், அதிகாலை 4 மணியளவில் டி.ஜே. எனப்படும் பாடல் இசைக்கும் கலைஞரிடம் தங்களது விருப்ப பாடலை போடும்படி அந்த பெண்கள் கூறியுள்ளனர். அவர்களின் சப்னம் என்பவர் கூறும்போது, அதற்கு அந்த டி.ஜே. பாடல் வேண்டுமென்றால் ரூ.500 வேண்டும் என கோரினார்.

அதற்கு ரூ.1,500 பணம் கொடுத்து 3 வெவ்வேறான பாடல்களை இசைக்கும்படி கூறினேன். பணம் கொடுத்தபோதும், கேட்டு கொண்ட பாடலை இசைக்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது என கூறியுள்ளார்.

இந்த வாக்குவாதத்திற்கு இடையே, அந்த பப்பில் பணியாற்றிய பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் தலையிட்டு, அந்த 3 பெண்களையும் அடித்து உள்ளனர் என கூறப்படுகிறது. இதனை அந்த பெண்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர்.

சப்னமுடன் அவரது 2 சகோதரர்கள் மற்றும் 2 தோழிகள் சென்று உள்ளனர். இதில், 3 பெண்களுக்கு கம்புகள் மற்றும் தடிகளை கொண்டு அடி விழுந்து உள்ளது. தடுக்க சென்ற 2 சகோதரர்கள் மீதும் தாக்குதல் நடந்து உள்ளது.

இதில் அவர்களுக்கு கைகள் மற்றும் விலா பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. போலீசாருக்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்தும், அரை மணி நேரம் கழித்தே அவர்கள் வந்தனர். அதனால், பவுன்சர்கள் தப்பியோடி விட்டனர் என அந்த பெண்கள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பப்பில் காசு கொடுத்து பாடலை போட கூறிய 3 இளம்பெண்களை பவுன்சர்கள் அடித்து, உதைத்து ஆடைகளை கிழித்த விவகாரத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்