பஞ்சாப்: தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை

பஞ்சாப்பில் 21 வயது மகள், 85 வயது தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2024-06-23 20:58 IST

சண்டிகார்,

பஞ்சாப்பின் பர்னாலா மாவட்டத்தில் ராமராஜ்ஜிய காலனியில் வசித்து வந்தவர் குல்பீர் மன் சிங். இவருடைய தாய் பல்வந்த் கவுர் (வயது 85). குல்பீரின் மகள் நிம்ரத் கவுர் (வயது 21). கனடாவில் இருந்து சமீபத்தில் நிம்ரத் நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குல்பீர், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை கொண்டு அவருடைய மகளை முதலில் சுட்டு கொன்றுள்ளார். இதன்பின்னர் ஆத்திரம் தீராமல், அவருடைய தாய் மற்றும் வளர்ப்பு நாயையும் சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குல்பீர் நீண்டகாலம் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்