கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்
கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது.;
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் கடன் தள்ளுபடி, வேளாண்பொருட்களுக்கு லாபகரமான விலை, பயிர் இழப்புக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிஷான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி என்ற விவசாயிகள் அமைப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த போராட்டம் தற்போது வலுத்து வருகிறது.
நேற்று அந்த மாநிலத்தில் அமிர்தசரஸ், ஹோசியாபூர், டார்ன் தரண், பதன்கோட், பெரோஸ்பூர், பாஸில்கா, மோகா, ஜலந்தர், கபூர்தலா உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள 18 சுங்கச்சாவடிகளில் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி போராடும் விவசாயிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் சர்வன் சிங் பந்தர் கூறும்போது, "எங்கள் கோரிக்கைகள் மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான சுங்கச்சாவடிகளில் போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.