பஞ்சாப்; போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!! 12 கிலோ ஹெராயின் பறிமுதல்

போதைப்பொருள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-08-10 05:10 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அங்குள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகபடும் வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மூவரும் போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ அளவிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடத்தலின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்