கேரளாவில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

கேரளாவில் 23.28 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-03 07:21 GMT

திருவனந்தபுரம்,

தமிழகத்தில் நடைபெற்று வரும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்திலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 23.28 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 23,471 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்