புதுச்சேரி: ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை உயர்வு..!!
புதுச்சேரியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை உயர்த்தி புதுச்சேரி அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின் பேரில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.