கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி மறுதேர்வு கால அட்டவணை வெளியீடு
கர்நாடகத்தில் பி.யூ.சி. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்கான மறுதேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை வெளியாகி இருக்கிறது.;
பெங்களூரு:
கர்நாடகத்தில் பி.யூ.சி. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்கான மறுதேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை வெளியாகி இருக்கிறது.
பி.யூ. கல்லூரி...
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி 2-ம் ஆண்டு பி.யூ. கல்லூரி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. பின்னர் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்காக மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மறுதேர்வுக்கான கால அட்டவணையை நேற்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு அடுத்த மாதம்(ஆகஸ்டு) 21-ந் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. தேர்வு தினமும் காலை 10.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 2.15 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடக்கிறது.
விருப்ப மொழி...
இதில் ஆகஸ்டு 21-ந் தேதி கன்னடம் மற்றும் அரபு மொழி தேர்வும், 22-ந் தேதி வேதியியல், அடிப்படை கணிதம் மற்றும் விருப்ப மொழி பாடத்தேர்வும், 23-ந் தேதி சமூகவியல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், 25-ந் தேதி வரலாறு, புள்ளியியல், 26-ந் தேதி ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், சில்லரை விற்பனை, சுகாதார பாதுகாப்பு, அழகு கலை தேர்வும், 28-ந் தேதி இயற்பியல், நிலவியல், உளவியல் தேர்வும் நடக்கிறது.
29-ந் தேதி கணிதவியல், புவியியல், கல்வி மற்றும் வீட்டு பராமரிப்பு தேர்வும், 30-ந் தேதி அரசியல் அறிவியல், கணிதம் ஆகிய தேர்வும், 31-ந் தேதி இந்தி தேர்வும், செப்டம்பர் 1-ந் தேதி பொருளியல் மற்றும் உயிரியல் தேர்வும், 2-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரஞ்சு மொழி தேர்வுகளும் நடக்கிறது.