பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு 9-ந் தேதி தொடக்கம்

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கும் என்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2022-11-28 21:12 GMT

பெங்களூரு:-

இறுதி கால அட்டவணை

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பி.யூ.கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்த தடங்கலும் இன்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான தற்காலிக தேர்வு தேதி அட்டவணை கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 10-ந் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அதுபற்றி தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை கேட்டு கொண்டது. ஆட்சேபனை தெரிவிக்கும் தேதி நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை, பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இறுதி கால அட்டவணையை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கணினி அறிவியல்

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கன்னட மொழி தேர்வு நடக்கிறது. 11-ந் தேதி கணிதம், 13-ந் தேதி பொருளியல், 14-ந் தேதி வேதியியல், 15-ந் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி தேர்வு, 18-ந் தேதி புவியியல், உயிரியல், 20-ந் தேதி வரலாறு, இயற்பியல், 21-ந் தேதி இந்தி, 23-ந் தேதி ஆங்கிலம், 27-ந் தேதி கணக்கு பதிவியல், மனை அறிவியல், 29-ந் தேதி கணினி அறிவியல் தேர்வுகள் நடைபெறும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பொதுத்தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்