புதுச்சேரியில் ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-26 08:31 GMT

புதுச்சேரி,

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும், காந்தி சிலை முன்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியிலும் ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்ததால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.    

Tags:    

மேலும் செய்திகள்