உ.பி.யில் ஸ்பா மையம் பெயரில் விபசாரம்; 60 பெண்கள் உள்பட 99 பேர் கைது
உத்தர பிரதேசத்தில் ஸ்பா மையத்தில் விபசாரம் நடக்கிறது என்ற தகவலை தொடர்ந்து போலீசாரின் ரெய்டில் 60 பெண்கள் உள்பட 99 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
காசியாபாத்,
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் பசிபிக் மால் பகுதியில் ஸ்பா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த ஸ்பா மையங்களில் விபசார தொழில் நடக்கிறது என போலீசாருக்கு தகவல் சென்று உள்ளது.
இதுபற்றி துணை காவல் ஆணையாளர் விவேக் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரகசிய தகவலை தொடர்ந்து, அதன் அடிப்படையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அதிரடியாக சோதனையிலும் ஈடுபட்டது.
இதில், 8 ஸ்பா மையங்களில் இருந்து 60 பெண்கள் மற்றும் 39 ஆண்கள் பிடித்து கொண்டு வரப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். அவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அந்த ஸ்பா மையங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக, பாலியல் சுரண்டல் தடுப்பு சட்டம் 1950-ன் கீழ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.