பேராசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படலாம் - யு.ஜி.சி அறிவிப்பு
பேராசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.;
புதுடெல்லி,
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியில் சேரும் பேராசிரியர்கள் 2 ஆண்டு பயிற்சி காலத்தில் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் இருக்கும் போது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக செயல்பட முடியாது.
பேராசிரியர் பயிற்சி காலத்தை முடித்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே வழிகாட்டுனராக பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக ஆராய்ச்சி மாணவர்களுக்கான வழிகாட்டுனர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் 565-வது கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் சில முடிவுகளை பல்கலைக்கழக மானியக்குழு எடுத்து அதனை தற்போது வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'உயர்கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் பேராசிரியர்கள் தங்களுடைய பயிற்சி காலத்திலும் ஆராய்ச்சி மாணவர்