1.30 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கும் பணி தொடக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக மைசூருவில் 1.30 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2023-02-10 21:07 GMT

மைசூரு:-

அழியாத மை

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் கையில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இந்த அழியாத மை மைசூருவில் உள்ள லேக் அண்ட் பெயிண்ட்- வார்னிஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி 10 மில்லி லிட்டர் அளவில் 1.30 லட்சம் மை பாட்டில்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்களை பேக்கிங் செய்யும் நேரத்தில் அதனுடன் சேர்த்து மை பாட்டிலையும் வைப்பது வழக்கம். வாக்கு எந்திரங்கள் மீது ஒட்டுவதற்காக 3.90 லட்சம் ஸ்டிக்கர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக மைசூரு மை தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலக்கெடு இல்லை

ஏற்கனவே மை தயாரிக்கும் பணியை தொழிற்சாலை ஊழியர்கள் தொடங்கி விட்டதாகவும், இந்த மை பாட்டில்களை தயாரிக்க காலக்கெடு எதையும் தேர்தல் ஆணையம் விதிக்கவில்லை எனவும் மைசூருவுக்கு வந்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் சுப்ரா சக்ஷேனா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்