இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைக்கு ரூ.15 லட்சம் பரிசு
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட்டுக்கு கர்நாடக அரசு சார்பில் ரூ.௧௫ லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. அந்த அணியில் வீராங்கனையாக இடம் பெற்று இருப்பவர் கர்நாடகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட். இதையடுத்து அவருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள கர்நாடக வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட்டிற்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.