பீகார் சிறையில் திடீர் சோதனையின்போது செல்போனை விழுங்கிய கைதி
வயிற்று வலியால் துடித்த அவரை சிறைத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது அவர் செல்போனை விழுங்கியது தெரியவந்தது.
கோபால்கஞ்ச்,
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தன. அதன்பேரில் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளை அடைத்து வைத்துள்ள சிறை அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கைதி தனது செல்போனை வாயில் போட்டு விழுங்கிவிட்டார். இதனால் அவர் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். சிறைத்துறை அதிகாரிகள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது அவர் செல்போனை விழுங்கியது தெரியவந்தது.
கைசர் அலி என்ற அந்த கைதி போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைதானவர். கடந்த 3 ஆண்டுகளாக இவர் சிறையில் இருக்கிறார்.