முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கிறது - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Update: 2022-06-13 19:45 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு தொடங்கி, மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளையும், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதையும் இந்த அருங்காட்சியகம் சித்தரிக்கிறது.

இந்த அருங்காட்சியகம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவி உஷா இன்று முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இந்தியாவின் அரசியல் பயணம் குறித்த ஒலி-ஒளி காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, பிரதமர்கள் அருங்காட்சியகம், நாட்டின் வெற்றிகரமான ஜனநாயகப் பயணம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு அதன் சமூக-பொருளாதார மாற்றத்தின் ஆழ்ந்த அனுபவத்தை வழங்குவதன் மூலம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கிறது என்று கூறினார்.

பின்னர் அங்கிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் அவர் தமது கருத்துக்களை பதிவிட்டார். அதில் அவர், இந்த அருங்காட்சியகம் நமது தேசியத் தலைமையின் பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்துகிறது. இது நம்மைப் போன்ற துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. இந்த கண்காட்சியானது வறுமை மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராகப் போராடுவது முதல் விண்வெளி ஆய்வில் புதிய உயரங்களை எட்டுவது வரையிலான நமது தேசத்தின் மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்