குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.;
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் பயணமாக இன்று குஜராத்தின் வடோதரா செல்கிறார். அங்கு ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் நாளை தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தன் தாயாரை நாளை பிரதமர் சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.