பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13-14ம் தேதிகளில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார்.

Update: 2023-07-12 13:47 GMT

புதுடெல்லி,

மோடி பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இது குறித்து பிரதமர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13-14ம் தேதிகளில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார்.

பிரதமர் மோடி. ஜூலை 14ம் தேதி நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படவுள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லி., தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியில், மோடி உரையாற்றுகிறார்.

பிரான்சில் இருந்து ஜூலை 15ம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபிக்கு செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஹெச்.ஹெச்.ஷேக் முகமது சயீத்துடன் இரு நாடுகள் உறவு, ஆற்றல், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் பேச உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்