வெளிநாட்டு மந்திரிகளிடம் மாமல்லபுரத்தின் சிறப்பை எடுத்துக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னைக்கு வந்ததற்காக அனைவரையும் மனமுவந்து வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Update: 2023-07-28 18:21 GMT

ஜி20 நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளின் மந்திரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசுவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி அனைவருக்கும் இருகைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னைக்கு வந்ததற்காக அனைவரையும் மனமுவந்து வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை நகரம் கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்றும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்றும் கூறிய பிரதமர், 'மாமல்லபுரத்தின் மனம் கவரும் சிற்பங்களையும், அதன் மகத்தான அழகையும் கண்டு ரசியுங்கள்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்