"அதானியின் மூலதனமே பிரதமர் மோடிதான்.." - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என ராகுல்காந்தி பேசினார்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோட்டாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
"காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் தொடர்புடைய மசோதாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம் என்பதை மக்கள் ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள். பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் வெறுப்பை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரப்பி வருகிறது" என குற்றம் சாட்டினார்.