தத்தா கோவிலில் அர்ச்சகர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்
தத்தா கோவிலில் அர்ச்சகர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
சிக்கமகளூரு:-
யாசகம் பெற்ற சி.டி.ரவி
சிக்கமகளூரு சந்திர திரிகோண மலையில் உள்ள தத்தா கோவிலில் நேற்று முன்தினம் தத்தா ஜெயந்தி விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுசியா ஜெயந்தியும், நேற்று சோபா யாத்திரையும் கொண்டாடப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தத்தா ஜெயந்தி இன்று (வியாழக்கிழமை) நடக்க உள்ளது.
இதையொட்டி இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் இன்று சந்திர திரிகோண மலைக்கு சென்று தத்தா பாதத்தை தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர். பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவியும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.
நிரந்தரமாக அர்ச்சர்கள்
இந்த நிலையில் தத்தா ஜெயந்தியையொட்டி அவர் நேற்று சிக்கமகளூரு டவுனில் நாராயணபுரா பகுதியில் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றார். மக்கள் யாசகமாக கொடுக்கும் அரிசி, பழம், வெள்ளம், நவதானியங்கள் மூலம் இன்று சந்திரி திரிகோண மலையில் வைத்து பிரசாதமாக தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அவருடன் ஏராளமானோர் யாசகம் பெற்றனர்.
அப்போது சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தத்தா கோவிலில் பூஜை செய்ய 2 அர்ச்சர்களை நியமித்து 8 பேர் கொண்ட குழுவினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த அர்ச்சகர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அர்ச்சர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.
சித்தராமையாவை சித்ராமுல்லாகான் என பேசியதில் என்ன தவறு உள்ளது என்றார்.