ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமராவதி,
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தில் இதை அவர் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் எப்போதும் சமூக நீதிக்கு துணை நிற்கும். கடந்த காலத்தில், ஜனாதிபதி பதவிக்கு கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை ஆதரித்துள்ளோம். அதே உணர்வில், பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.