ஜனாதிபதி தேர்தல்: கோவாவில் ஆதரவு திரட்டிய திரவுபதி முர்மு

கோவாவில் திரவுபதி முர்மு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Update: 2022-07-14 23:45 GMT

பனாஜி,

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் கோவாவில் பா.ஜனதா மற்றும் பா.ஜனதாவை ஆதரிக்கும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதற்காக நேற்று கோவா வந்தார்.

இதற்காக விமான நிலையம் வந்திறங்கிய அவரை மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக், மாநிலங்களவை எம்.பி. வினய் தெண்டுல்கர், பா.ஜனதா தலைவர் சதானந்த் சேட் தனவடே ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பனாஜியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாநில பா.ஜனதா மற்றும் ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.-எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கோரினார். குறிப்பாக, பா.ஜனதாவின் 20 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை அவர் சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்