78வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றஉள்ளார்.;

Update:2024-08-14 08:58 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் ஒளிபரப்பப்படும். அதை தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்படும்.

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார். 'வளர்ந்த பாரதம்' என்ற கருப்பொருளில் நிகழாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்