இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 26ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னைக்கு வருகை தர இருக்கிறார்.
அவர் இரண்டுநாள் பயணமாக சென்னை வரவுள்ளார்.