காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-30 19:21 GMT

புதுடெல்லி,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில் காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும்.

இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல் தங்கப் பதக்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்ததன் மூலம் வரலாற்றை எழுதியுள்ளார். நடப்பு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக அவர் வென்ற முதல் தங்கப் பதக்கம், நாடு முழுவதும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட அலைகளை உருவாக்கி உள்ளது. மீராபாய்! உங்களையும் உங்கள் பதக்கங்களையும் நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது" என்று அதில் திரவுபதி முர்மு பதிவிட்டுள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்